உங்களை அன்புடன் வரவேற்கிறது - விழுப்புரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் !!எழுச்சித்தமிழரின் சொல்லையும் செயலையும் எண்ணத்தையும் முன்னின்று வண்ணமாக்கி கொண்டிருக்கும் முண்ணணிச் சிறுத்தைகளுக்கு எங்கள் வணக்கம்..! மக்கள் வெள்ளம் பரவியது.. மாநகரம் குலுங்கியது மாநாடு சிறந்தது மண்புள்ளவர்கள் போற்றினார்கள் தூற்றியவர்கள் துயிலிழந்து போனார்கள்.., வளவனின் மாநாடு வரலாறானது... ஈழம் என்றால் என்ன..? இறையாண்மை என்றால் என்ன..? ஈடுகட்டினான் நம் தலைவன் எடுத்துவைத்தான் வரலாற்றை உண்மையை உணர்த்தினான் உலகிற்கு... புறம் சொல்லி புலம்பியவர்கள் புறமுதுகு காட்டி ஒடினார்கள் கயவர்கள்... ஈட்டிமுனை பார்வைக்கும் சாட்டையடி பதிலுக்கும்... வீறுகொண்டு எழுவோம்... சிறுத்தையாய் சீறுவோம்... வெற்றிக்கு பாடுபடுவோம் அங்கிகாரம் அடைந்திடுவோம் சாதியத்தை வேரறுப்போம் தமிழீழத்தை வென்றெடுப்போம் சமத்துவம் அடைந்திடுவோம்... ”திரு.மாவளவனின்” வழிநடப்போம் தமிழனின் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றுவோம் 2011 ஆண்டே வருக..! வருக..!! விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டே வருக..! வருக...!!! சிறுத்தைகள் ஆண்டு வாழ்த்துக்களை...பகிர்ந்து கொள்ளும், பலகோடி தொண்டர்களில் கடை கோடி தொண்டன் நான்...... பொறியாளர்.க.கோவிந்தராசன்.!!

அய்யோத்திதாசர்

Thursday, November 18, 2010


பண்டிதர் க. அயோத்திதாசர்


1845 வருடம் மே-20 ல் சென்னையில் பிறந்தார். தன் இயற்பெயர் காத்தவராயன். அப்பா பெயர் கந்தசாமி, அம்மா பெயர் தெரியவில்லை. பண்டிதருடைய தாத்தா பெயர் கந்தப்பன். கந்தப்பன் ஆங்கிலேயரிடம் வேலை பார்த்தார் . பழைய ஓலை சுவடிகள், தமிழ் நூல்கள் வைத்திருந்தார். பாரம்பரிய சித்த மருத்துவராக இருந்தார். இன்று நாம் வைத்திருக்கும் திருக்குறள் நூல் பண்டிதறுடைய தாத்தா பாதுகாத்த நூலாகும். தன் தாத்தா கந்தப்பனைபோலவே மிக சிறந்த தமிழ் பண்டிதராக, சித்த மருத்துவராக விளங்கினர். வல்லகத்தி புலவர் அயோதிதாசரிடம் கல்வி கற்க சென்றார். தன் குருவின்பால் கொண்ட அன்பின்காரணமாக தன் பெயரை அய்யோதிதாசர் என்று மாற்றிக்கொண்டார்.
இளமைப்பருவம் :
பண்டிதர் வாழ்ந்த சென்னை பகுதியில் 1869 - "சூர்யோதயம் "இதழ் வெளிவந்தது அதை புதுப்பேட்டை வேங்கிடசாமி பண்டிதர் நடத்தினார். 1871 இல்" பஞ்சமன் "இதழும் வெளிவந்தது. அதில் தமிழ்,தமிழக வரலாறு போன்றவற்றை படித்த பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி தாழ்த்தப்பட்டார்கள்? குறித்து விரிவாக சிந்தித்தார். அதன் பயனாக சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எவ்வாறு விடுவிப்பது ? அவர்களை எப்படி அரசியல் படுத்துவது என சிந்தித்தார். தன் தந்தை கந்தசாமியோடு ஊட்டி சென்றார் தன் 25 வயதில் "அத்வைதானந்த" சபையை 1870௦ இல் உருவாக்கி நடத்தினார். நீலகிரியில் தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையின பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்தார் . இதன் மூலம் சாதிபேத உணர்வை ஒழிக்க முற்பட்டார். மருத்துவப் பணிகளையும் செய்தார். மலையின பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இரங்கூன் சென்றார் அங்கே தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது அதற்கு தசரதராமன் என் பெயர் சூட்டினார். அந்த குழந்தையும் அவரது மனைவியும் நோயினால் இறந்துபோனார்கள்.
திராவிட மகாஜன சபை :
இரங்கூனில் செல்வசெழிப்பாக வாழ்ந்தாலும் தமிழின மக்கள் எப்படி சாதியால் ஒடுக்கப்பட்டார்கள் ? தீண்டப்படாத மக்களாக ஒதுக்கப்பட்டது எப்படி ? என்றும் அவர்கள் விடுதலை குறித்து சிந்தித்துக்கொண்டே இருந்தார். மீண்டும் ஊட்டி வந்து, தன் உறவினரான ரெட்டமலை சினிவாசன் தங்கை தனலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பட்டாபிராமன், மாதவராம், ஜானகிராமன்,ராஜாராமன் 4 மகன்கள் பிறந்தனர். இந்நேரத்தில் ஊட்டிக்கு ஓய்வொடுக்க ஆல்காட் அவர்கள் வந்திருந்தார். பண்டிதரும் ரெட்டமலை சினிவசனும் ஆல்காட்டைசந்தித்துப்பேசினார்கள். பல முறை விவாதித்தனர். மதம், பவுத்த மதம் குறித்து நிறைய விவாதித்தனர். இச்சந்திப்புகள் பண்டிதரை இனொரு திசைக்கு இட்டுச்சென்றது . சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கு பள்ளி ஒன்றை துவக்கி நடதிதிக்கொண்டிடுக்கும் அருட் பணியாளர் ஜான் ரத்தினம் அவர்களோடு பண்டிதருக்கு நட்பு ஏற்பட்டது. ஒத்தக்கருத்துகொண்ட இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். ஜான் ரத்தினம் 1882 இல் திராவிடர் கழகம் என்ற ஒரு அமைப்பை நடத்திவந்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக 1885 இல் "திராவிட பாண்டியன் " என்னும் இதழை துவக்கினார். அந்த இதழின் துணை ஆசிரியராக பண்டிதர் பொறுப்பேற்றார்.பின்னால் தமிழன் இதழ் சிறப்பாக நடத்தியதற்கு இந்த பின்புலமே காரணமாக இருந்தது. பண்டிதருக்கு அம்பிகாதேவி , மாயாதேவி என்ற இரு மகள்கள் பிறந்தனர்.
மேலும் அய்யோத்திதாசரின் செய்திகள் காண..

0 comments:

Post a Comment

  © விடுதலைச் சிறுத்தைகள் கட்சி/ விழுப்புரம் மாவட்டம்/ தொடர்புக்கு:Email: thirumavpm@gmail.com/9445512506

Back to TOP