ரெட்டைமலை சீனிவாசன்
Thursday, November 18, 2010
ரெட்டமலை சீனிவாசன் - 1859 – 1945
" நானும் டாக்டர் அம்பேத்காரும் நகமும் சதையாக இருந்து தலித்களுக்கு பாடுபட்டோம் "இதர சமூகத்தவர்களும், சமயத்தவர்களும் நம்மை முன்னேற்ற வந்ததாக சொல்வது
அவர்களின் சுயநலமாகும். நம்முடைய இடைவிடாத சுயமுயற்சியால் முன்னேறி வந்து
கொண்டிருக்கிறோம் "
ரெட்டமலை சீனிவாசன்செனைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு வட்டத்தில் கொளியாலம் என்னும்
கிராமத்தில், ரெட்டமலை ஆதிநாயகி தம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 7, 1859
ஆம் ஆண்டு பிறந்தார்.
இந்திய அரசியலுக்கு காந்தி வருவதற்கு முன்பே, இமண்ணில் தீண்டாமை, சாத்திய
கொடுமைகளை எதிர்த்து போராடியவர்.

1887 ஆம் ஆண்டு அரங்க நாயகியை மணந்தார்
1891 ஆம் ஆண்டு பறையர் மஹா ஜன சபையை நிறுவி தீண்டாமைகொடுமையை எதிர்த்தார்
1893 - பறையர் என்ற வார இதழை துவக்கி தலித் மக்களின் விடுதலைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
1894 - பஞ்சமி நில மீட்பு போராட்டம் நடத்தினார்
1895 - சென்னைக்கு வருகை தந்த ஆளுநர் லார்ட் எல்ட்சின் அவர்களிடம் தமிழகத்தில் நிலவிய தீண்டாமை, சாத்திய கொடுமைகளை குறித்தும், தலித்கள் சரிசமமாக வாழ கல்வி , வேலைவாய்ப்பு அரசியல் பற்றி ஒரு பெரிய கோரிக்கை விண்ணப்பம் ஒன்றை நேரடியாக கொடுத்தார்
1897 - சென்னை விக்டோரியா மண்டபத்தில் பூர்வீக குடிமக்களின் மாநாடு நடத்தினார்
1899 - சென்னையில் உள்ள வெள்ளைக்காரர்களின் வீட்டில் பட்லராக பனி செய்தவர்களின் குறைகளை களைய இரவு 11 -மணிக்கு பிறகு பொது கூடம் ஒன்றை சென்னை ராயபேட்டையில் உள்ள தூய வெசுலியன் ஆலயத்தில் நடத்தி ஆட்சியாளர்களுக்கு தெரிவித்தார்

1901 - இங்கிலாந்து சென்றார் 1904 - தென் ஆபிரிக்க , நேட்டலில் உள்ள நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பலராக பனி புரிந்தார் .
அங்கே பணியாற்றி கொண்டிருந்த காந்தி அவர்களுக்கும் மொழிபெயர்பாளராகவும் இருந்தார் அபோதுதான் அவருக்கு தமிழ் கற்று கொடுத்தார் மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து போடுவதற்கு கற்று கொடுத்தார்.
அங்கே பணியாற்றி கொண்டிருந்த காந்தி அவர்களுக்கும் மொழிபெயர்பாளராகவும் இருந்தார் அபோதுதான் அவருக்கு தமிழ் கற்று கொடுத்தார் மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து போடுவதற்கு கற்று கொடுத்தார்.
1921 மீண்டும் சென்னைக்கு வந்தார் அப்போது அரசியலாக பரிணமித்துள்ள நீதிகாட்சியில் இணைந்து பணியாற்றினார்.
1923 ஆண்டுமுதல் 1938 ஆண்டுவரை சென்னை சட்டப்பேரவை உறுபினராக இருந்து பணியாற்றினார் அப்போது தலித்களை பிற சாதி இந்துக்கள் போல் சரி சமமாக நடத்தப்பட வேண்டும். பொதுச்சாலையில் நடக்கவும் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் பொது இடங்களில் அரசு அலுவலங்களில் நுழைவதற்கு உரிமை அளிக்கப்பட வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும் என சட்டசபையில் உரையாற்றினார். இந்த கோரிக்கையின் அடிப்படையில்தான் 1925 ஆண்டு புனித ஜார்ச் கோட்டை அரசுப்பதிவிதழ் 1 A / 2660 ( No . L .X .M ) இன் கீழ் தலித் மக்களும் பிறரைப்போல சமமாக மதிக்கப்பட வேண்டுமென அரசு ஆணையிட்டது..........
மேலும் ரெட்டைமலையாரின் செய்திகளைக் காண..............
0 comments:
Post a Comment