உங்களை அன்புடன் வரவேற்கிறது - விழுப்புரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் !!எழுச்சித்தமிழரின் சொல்லையும் செயலையும் எண்ணத்தையும் முன்னின்று வண்ணமாக்கி கொண்டிருக்கும் முண்ணணிச் சிறுத்தைகளுக்கு எங்கள் வணக்கம்..! மக்கள் வெள்ளம் பரவியது.. மாநகரம் குலுங்கியது மாநாடு சிறந்தது மண்புள்ளவர்கள் போற்றினார்கள் தூற்றியவர்கள் துயிலிழந்து போனார்கள்.., வளவனின் மாநாடு வரலாறானது... ஈழம் என்றால் என்ன..? இறையாண்மை என்றால் என்ன..? ஈடுகட்டினான் நம் தலைவன் எடுத்துவைத்தான் வரலாற்றை உண்மையை உணர்த்தினான் உலகிற்கு... புறம் சொல்லி புலம்பியவர்கள் புறமுதுகு காட்டி ஒடினார்கள் கயவர்கள்... ஈட்டிமுனை பார்வைக்கும் சாட்டையடி பதிலுக்கும்... வீறுகொண்டு எழுவோம்... சிறுத்தையாய் சீறுவோம்... வெற்றிக்கு பாடுபடுவோம் அங்கிகாரம் அடைந்திடுவோம் சாதியத்தை வேரறுப்போம் தமிழீழத்தை வென்றெடுப்போம் சமத்துவம் அடைந்திடுவோம்... ”திரு.மாவளவனின்” வழிநடப்போம் தமிழனின் வரலாற்றை உலகிற்கு பறைசாற்றுவோம் 2011 ஆண்டே வருக..! வருக..!! விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டே வருக..! வருக...!!! சிறுத்தைகள் ஆண்டு வாழ்த்துக்களை...பகிர்ந்து கொள்ளும், பலகோடி தொண்டர்களில் கடை கோடி தொண்டன் நான்...... பொறியாளர்.க.கோவிந்தராசன்.!!

ஒன்றியம்


ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.ஒ (European Union அல்லது EU) என்பது தற்பொழுது 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச் ஒப்பந்தம்Maastricht Treaty) என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள்முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருட்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நகர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கைவேளாண்மைமீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணயமுறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது ஒரு வெளிநாட்டலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்புஜி8 உச்சி மாநாடுஐக்கிய நாடுகள் சபை என்பவற்றிலும் சார்பாண்மை (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "நாட்டோ" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. செஞ்சென் ஒப்பந்தத்தின் (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக்கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கப்பாடு, அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம்ஐரோப்பிய நாடாளுமன்றம்ஐரோப்பிய ஒன்றிய அவைஐரோப்பிய அவைஐரோப்பிய நீதிமன்றம்,ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.
1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது

Read more...

  © விடுதலைச் சிறுத்தைகள் கட்சி/ விழுப்புரம் மாவட்டம்/ தொடர்புக்கு:Email: thirumavpm@gmail.com/9445512506

Back to TOP