அம்மன் கோவில் திருவிழாவும் சிறுத்தைகளின் களப்பணி கலந்துரையாடலும்
Friday, January 28, 2011
உளுந்தூர் பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த பு.கிள்ளனூரில் கடந்த 24.01.11 அன்று அம்மன் கோவில் திருவிழாவும் சிறுத்தைகளின் களப்பணி கலந்துரையாடலும் நடைப்பெற்றது.
தலைவரின் தலைமையில் வரும் தேர்தலை நாம் கவனமுடனும், நேர்தியுடனும், முழு முயற்ச்சியுடனும் நாம் சந்திக்க வேண்டும் என்றும் களப்பணியில் சாதி மதம் என்று பாகுபாடில்லாமல் எல்லோரையும் அனுக வேண்டும், விடுதலை நோக்கத்தை எடுத்து சொல்ல வேண்டும். தமிழர்களுக்கு ஏற்ப்படும் தீங்குகளை அடித்தட்டு மக்கள் வரை உணர்த்தவேண்டும், தலைவரின் கொள்கைகளுக்கு உற்ற உறுதுணையாக இருந்து அவரின் சொல்லை செயலாக்க வேண்டும் என்றும் பல்வேறு உறுதி மொழிகளையும் எடுத்தனர்.
முடிவில் உறுப்பினர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு தேர்தலில் வாக்களிக்க வேண்டிய விழிப்புணர்வு என தெளிவு செய்தார்கள் இகூட்டத்தினை மாவட்ட தொழிலாளர் முண்ணணி து.செயளாளர் ச.தே.காமராசன் தலைமையில் ஒருங்கினைக்கப்பட்டன கூட்டத்தில் முகாம் செயலாளர். சங்கர், மு.பொருலாளர் மணிகண்டன், து.செயலாளர் பரமசிவம் சக்தேஸ்பரன் மற்றும் உறுப்பினர்கள் சிறுத்தைகள் 120 பேர் கலந்து கொண்டனர். முடிவில் இசைகச்சேரி தலைவரின் வரலாறு பாடலோடு தொடங்கிற்று சிறுத்தைகளின் கொண்டாட்டம் சிறப்பாக நிறைவுபெற்றன..
2011 விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு எனவும் , சாதி ஒழுப்பே மக்கள் விடுதலை என்றும், தமிழ் தேசியத்தை வென்றெடுப்போம் எனவும் தொடர் முழக்கமிட்டனர்.
0 comments:
Post a Comment